2025 IPL: புதிய தலைவரை நியமித்த RCB!
![2025 IPL: புதிய தலைவரை நியமித்த RCB!](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67adfdf27681c.jpg)
எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி தொடங்கும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் தலைவராக ரஜத் படிதார் (Rajat Patidar) நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 முதல் 2024 வரை அணியின் தலைவராக செயற்பட்ட தென்னாப்பிரிக்க நட்சத்திரம் ஃபாஃப் டு பிளெசிஸை பெங்களூரு அணி கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தக்கவைக்கத் தவறியது.
இதனால், முன்னாள் தலைவர் விராட் கோலி மீண்டும் அணியை வழிநடத்துவார் என்ற பரவலான ஊகங்களுக்கு மத்தியில் இந்த நியமனம் வந்துள்ளது.
2021 முதல் RCB உடன் இருக்கும் படிதார், ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியின் 8 ஆவது தலைவராவார்.
31 வயதான படிதார் 2024 சீசனில் RCB க்காக 15 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் அடங்கலாக 395 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
RCB தலைவராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும், சையத் முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப் போட்டிக்கு மத்தியப் பிரதேசத்தை அழைத்துச் சென்றதாகவும் படிதார் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தொடரில் 0 போட்டிகளில் 61 சராசரியிலும் 186.08 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 428 ஓட்டங்களை எடுத்தார் மற்றும் தொடரின் போது இரண்டாவது அதிக ஓட்டம் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.
படிதாரை புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என்ற அழைப்பை RCB இன் சிரேஷ்ட வீரர் விராட் கோலி ஆதரித்ததோடு, கடந்த சில ஆண்டுகளில் மத்திய பிரதேச வீரர் பல நிலைகளில் தன்னை மேம்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.