50 அதிகமான காகங்கள் திடீரென உயிரிழப்பு - அதிகாரிகள் ஆய்வு!
புத்தளம் நெடுங்குளம் பகுதியில் 50 அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான காரணம் இதுவரைத் தெரியவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நெடுங்குளம் பகுதியில் 50 அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான காரணம் இதுவரைத் தெரியவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50 ற்கும் அதிகமான காகங்கள் உயிரிழந்துள்ளன.
இதன்போது, அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் வருகைத் தந்து உயிரிழந்த காகங்களை பார்வையிட்டனர்.
குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு சென்றுள்ளனர்.