கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கும் பிரித்தானிய எம்.பிகள்!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை மருதங்கேணியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணி நேரமாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை மருதங்கேணியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணி நேரமாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில், முறைப்பாடு செய்திருந்தமைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த வாக்குமூலம் இணையவழி ஊடாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருப்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளமை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மெக்டொனக் (Siobhain McDonagh) மற்றும் எலியட் கொல்பேர்ன் ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
பாரிய அட்டூழியங்கள், இனப்படுகொலைகளுக்கான நீதி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குரல் கொடுக்கும், தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த கைது உணர்த்துவதாக சிபோன் மெக்டொனக் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக பிரித்தானியாவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான எலியட் கொல்பேர்ன் தெரிவித்துள்ளார்.