சிசு செரிய பஸ் சேவைக்கு மேலும் 500 புதிய பஸ்கள்!

சிசு செரிய பஸ் சேவைக்கு மேலும் 500 புதிய பஸ்கள்!

சிசு செரிய பஸ் சேவைக்காக மேலும் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC) பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் 811 பஸ்கள் மற்றும் 726 தனியார் பஸ்கள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பஸ்கள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்காக மானியமாக 2,000 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது..

போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பஸ்கள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பஸ்களை இயக்குவதற்கு NTC வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் NTC க்கு முன்மொழிவை அனுப்பிய பின்னர், அந்தப் பகுதிகளுக்கு பஸ்கள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.