தென்னிலைங்கையில் விஷ தேநீர் - 6 ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

தென்னிலைங்கையில் விஷ தேநீர் - 6 ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!


பாணந்துறையில் உள்ள பாடசாலையொன்றில் 6 ஆசிரியர்கள் பருகிய தேநீர் விசமானதை அடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு இடைவேளையின் போது, அவர்கள் தேநீர் அருந்திய நிலையில், அவர்கள் பயன்படுத்திய சீனி போத்தலில் அடையாளம் காணப்படாத மருந்து வகைகள் கலக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், குறித்த சீனி போத்தலை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.