சுழிபுரம் சவுக்கடி கடற்கரை புத்தர் சிலையால் சர்ச்சை - சிலை அகற்றப்பட்டது?

சுழிபுரம் சவுக்கடி கடற்கரை புத்தர் சிலையால் சர்ச்சை - சிலை அகற்றப்பட்டது?

 
யாழ்ப்பாணம் - சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் கடற்படையினரால் 10 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையினால் எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என மீன சமூகத்தினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்கரையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் காணி ஒன்றினுள் முகாமிட்டு நீண்டகாலமாக தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் பின்னே இயற்கையாக வளர்ந்த அரச மரம் ஒன்றின் கீழே இவ்வாறு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் தமது முகாமினுள் காணியை கொண்டிருக்கின்ற அதேவேளை, எதற்காக பொதுமக்கள் பகுதியில் குறித்த விகாரையை அமைக்க வேண்டும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த  புத்தர் சிலை அண்மையில் அமைக்கப்பட்டிருந்தாலும் மாதகல், சம்பில்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  விகாரையை அண்டிய பகுதிகளில் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளில் கடற்படையினர் தொடர்ந்து தலையீட்டை மேற்கொண்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த சிறிய புத்தர் சிலையுடனான வணக்கஸ்தலத்தை அகற்றுமாறு பிரதேசவாசிகள்  கோரியிருந்தனர்.

பிந்திக் கிடைத்த தகவலின் படி, யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்த நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சமைடைந்தனர். 

இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான நிலையில் குறித்த புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

யாழில் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் முளைத்த புத்தர்! நாளை வெடிக்கவுள்ள  போராட்டம் - ஐபிசி தமிழ்