வெடுக்குநாரி மலையில் சிறப்பாக நடைபெற்ற சிவராத்திரி பூஜை

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பலத்த கெடுபிடிகளுக்கு அப்பால் சிவராத்திரி தின பூஜைகள் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின பூஜை வழிபாடுகள் காலை ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றிருந்தது. குறித்த பூஜை நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த கிழமை நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரிதினம் தொடர்பாக ஆலயத்தின் பூசாரியார் மற்றும் முக்கியஸ்தர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் பெறப்பட்டுட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.