ஹாலி - எல பிரதேசத்தில் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயம்!

ஹாலி - எல பிரதேச செயலகத்துக்கு முன்பாக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

லுணுகல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து பண்டாரவளைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த வேன் விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.