வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு

வெள்ளவத்தை – ராமகிருஸ்ணா மாவத்தை பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று காலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், விருந்தகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.