நுவரெலியா - திம்புல பத்தனை வீதி விபத்தில் 5 பேர் காயம்!

நுவரெலியா - திம்புல பத்தனை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியா - திம்புல பத்தனை வீதி விபத்தில் 5 பேர் காயம்!

நுவரெலியா - திம்புல பத்தனை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.