ஹரக் கட்டாவை மேலும் 5 நாட்களுக்கு விசாரணைக்கு உட்படுத்த அனுமதி!
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக்கவை மேலும் 5 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அவரை ஒரு வருடத்துக்கு தடுத்து வைத்து விசாரிக்க முடியும் எனவும் 90 நாட்கள் என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பு காவல் விசாரணை உத்தரவுக்கமைய, அவர் 360 நாட்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
அதன்படி, மேலும் 5 நாட்கள் தடுத்து வைத்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.