லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு வழங்குவதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு வழங்குவதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எரிவாயு விலையை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்கும் போது அதில் கிடைக்கும் சிறிய இலாபத்தின் ஒரு பகுதி, அந்த இலாபத்தின் உரிமையாளரான அரசாங்கத்துக்கு வழங்கப்படும்.
அதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக அந்த தொகை அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்த பாரிய தொகை வழங்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.