நோயாளர் காவு வாகனம் & வேன் மோதல் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
பலாங்கொடை பகுதியில் நோயாளர் காவு வாகனம் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை பகுதியில் நோயாளர் காவு வாகனம் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்றும் பலாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பாரிய காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை பலாங்கொடை ஒப்பனாயக்க உடவெல அமுனுகாவ என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.