இலங்கை முப்படைகளின் பயிற்சிக்காக இந்தியா 23 மில்லியன் ரூபாய் நிதி வழங்கல்!

இலங்கை முப்படைகளின் பயிற்சிக்காக மேலதிகமாக 23 மில்லியன் ரூபாயை நிதியுதவியாக வழங்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை முப்படைகளின் பயிற்சிக்காக இந்தியா 23 மில்லியன் ரூபாய் நிதி வழங்கல்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பதில் இந்திய உயர்ஸ்தானிகர் சத்யஞ்சால் பாண்டே, மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவப் பிரதிநிதிகள், இந்திய, இலங்கை இராணுவங்கள் மற்றும் விமானப் படைகளுக்கு இடையிலான இருதரப்புப் பயிற்சியான மித்ரா சக்தி பயிற்சியை நடத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை முப்படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 23 மில்லியன் ரூபாய் மேலதிக நிதியுதவி இந்தியாவால் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முப்படைகளின் திறனை மேம்படுத்துவதற்கான ஆதரவுக்காக இந்தியாவுக்கு இலங்கை அதிகாரிகள் தமது நன்றியைத் தெரிவித்ததாகவும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.