யாழ்ப்பாணம் - மாமுனையில் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் - மாமுனை பகுதியில் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை கேரள கஞ்சா கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - மாமுனையில் 11 மில்லியன் ரூபாய்  பெறுமதியான கேரள கஞ்சா   மீட்பு!

யாழ்ப்பாணம் - மாமுனை பகுதியில் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை கேரள கஞ்சா கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 18 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில், 35 கிலோகிராமுக்கும் அதிகளவு கேரள கஞ்சா கைவிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும், சம்பவம் தொடர்பில். எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடி படகில், முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான 7 மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைததானவர்கள்  களுத்துறை மேலதிக நீதவான் ஏ.என். ஆர். பெரேரா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக குறித்த மீன்பிடி படகு சென்றிருந்தபோது, அந்த இளைஞரை கடலில் தள்ளிவிட்டு, சக மீனவர்கள் அவரை துன்புறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, பேருவளை - அம்பேபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.