நாடு முழுதும் டியூசன் வகுப்புகளுக்காக வருடாந்தம் இருபதாயிரம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்!
மேலதிக வகுப்புகளுக்காக வருடாந்தம் 20000 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அத்துறையை ஒழுங்குமுறைக்கு உட்படுத்த வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் துறை பேராசிரியர் திரு.வசந்த அதுகோரள தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பாடங்களில் சித்தியடையாதவர்களும் டியூசன் வகுப்புகளில் கற்பித்து வருவதாகவும் அவ்வாறு வகுப்புகள் நடத்துவது குற்றம் என்றும் தகவல் வெளியாகி உள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.
கல்வித்துறையை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி ஆசிரியர்களின் கல்வித் தகுதியை சரிபார்த்து அவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.
அந்த விடயத்தில் கல்வி அமைச்சுக்கு பாரிய பங்கு இருப்பதாக வசந்த அத்து கோரள தெரிவித்தார்.
அப்படிச் செய்யாவிட்டால், பாடசாலை கல்வி, ட்யூசன் வகுப்புகளுக்குப் பலியாகி, வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.