பிழைப்பு அரசியலில் வரலாற்று சாதனை படைத்த அருண் சித்தார்த்!
முந்தநாள், நேற்று, இன்று, இடையில்…..? என்று கடந்த கால கட்டங்களில் பிழைப்பு அரசியல் நடத்தி வரலாற்று சாதனை படைத்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருண் சித்தார்த் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதுகுறித்த வரலாற்றுப் பதிவை அவர் வௌியிட்டுள்ளார்.
முன்னைய நாள்: 2019 - அக்டோபர்- 10
பொதுஜன பெரமுனை கட்சியின் கோட்டபாயாவின் தீவிர பிரசார செயல்பாட்டாளராக அருண் சித்தார்த் செயற்பட்டார்.
நேற்று முன்தினம் :2024- மார்ச்- 21
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.
நேற்று..2024-யூன்-22
மவ்பிம ஜனதா கட்சியின் (எம்.ஜே.பி) யாழ் மாவட்ட அமைப்பாளராகவும், உயர்பீட சபை உறுப்பினராகவும் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இதற்கான நியமனத்தை நேற்று வழங்கினார்.
இடையி்ல் பிள்ளையானுடன்..
இவரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக யாரும் பிழைப்பு அரசியலுக்காக பாவிக்கலாம் என்றும் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.