அயலானுடன் களமிறங்கும் லால் சலாம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணு விஷால் ஆகியோர் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திரைப்படம் குறித்து புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. 

குறித்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மாத்திரமே நடித்திருக்கும் நிலையில், வெளியாகும் அனைத்து போஸ்டர்களும் அவரை முதன்மைப்படுத்தியே வெளியிடப்படுகிறது.

இந்த போஸ்ட்டர் வெளியாகி சிலமணி நேரத்திலேயே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் வெளியீடு என குறிப்பிட்டு அதன் போஸ்டரும் வெளியாகியது.

அயலான் திரைப்படத்தின் டீசர் 

ஒக்டோபர் 6 ஆம் திகதி இப்படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் படத்தை இன்று நேற்று நாளை என்னும் சிறந்த படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் A R ரகுமான் இசையமைக்கிறார் 

இந்த இரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அதிக வசூலை குவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.