பெரேக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கியுள்ளாரா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பெரேக் ஒபாமா இலங்கையில் தற்போது தங்கிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று உண்மைத் தன்மை கண்டறிவில் தெரியவந்துள்ளது.

பெரேக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கியுள்ளாரா?

இலங்கையின் சுற்றுலாத் துறை, கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதன்போது, பல புகழ்பெற்றவர்களும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பெரேக் ஒபாமா தற்போது இலங்கையில் விடுமுறையை கழிப்பதாக தவறான சமூக ஊடக செய்தி வெளியாகியுள்ளது.

இதன்போது, அவர் இலங்கை வீதியிலுள்ள சிறிய விற்பனையகத்தில் இளநீரைக் குடித்துக்கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

எனினும், பெரேக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்பதை பல நம்பத்தகுந்த தரப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

இந்தநிலையில் பெராக் ஒபாமா, இளநீரை ருசிக்கும் உண்மையானப் படங்கள், 2016 இல் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது லாவோஸுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது எடுக்கப்பட்டது. 

அதேநேரம் சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் படங்கள் இந்தோனேசிய படைப்பாளரான அகன் ஹராஹாப்பினால் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.