பஸ் கட்டணங்கள் குறைக்கப்படாது - போக்குவரத்து ஆணைக்குழு விசேட அறிவிப்பு...
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டீசல் விலை 307 ரூபாவாக குறைந்ததால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும் எனவும், டீசல் விலை 4 சதவீதம் குறைந்தால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும். ஆனால் இம்முறை டீசல் விலை 2.8 சதவீதமாகவே குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்று (31) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.
எனவே, டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென அவர் தெரிவித்தார்.