கொழும்பு துறைமுக நகரத்தில் வரியற்ற வணிகம் - விசேட வர்த்தமானி அறிவிப்பு!
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியற்ற சில்லறை வர்த்தகம் அல்லது பாரிய வர்த்தக அங்காடிகளை நிறுவுவதற்கு தேவையான பூர்த்தி செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட விதிகளின் படி குறித்த வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு முதலீட்டாளர் வரியில்லாத சில்லறை வணிகத்தை ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முற்பணமாக வைப்பிட வேண்டும் என்பதுடன், வர்த்தக நடவடிக்கைகளில் சர்வதேச அளவிலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வணிகத்தை நடத்த குறைந்தபட்சம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டுமென வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.