இலங்கையில் டெங்கு அபாய வலயங்கள் அதிகரிப்பு!
இலங்கையில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அதனா பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டார்.
இது அபாயகரமான நிலைமை என சுட்டிக்காட்டிய அவர், டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு தொற்று பரவல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமைகளில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மீள முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன வலியுறுத்தினார்.