பிறதர்லெஸ் நாவலுக்கு தி இந்து விமர்சனம்

பிறதர்லெஸ் நாவலுக்கு தி இந்து விமர்சனம்

இலங்கையின் போர் தொடர்பில் வெளியாகியுள்ள பிரதர்லஸ் நைட் என்ற சகோதரர் இல்லாத இரவு என்ற நாவல் தொடர்பில் தெ ஹிந்து தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இந்த நாவலை இலங்கை வம்சாவழி அமெரிக்க ஊடகவியலாளரான வி.வி கணேசனாநந்தன் எழுதியுள்ளார்.

இவர் ஏற்கனவே உள்நாட்டுப் போரில் தகர்ந்துப்போன குடும்பம் ஒன்றின் கதையை காதல் திருமணம் என்ற நாவலின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த சகோதரரற்ற இரவில் போர் பயங்கரவாதம் மற்றும் இலங்கையின் தமிழ் சமூகத்தின் கதையை பிரதிபலிக்கிறது.

பயங்கரவாதத்தின் மொழியையே தகர்க்க விரும்புவதாக நாவலாசிரியர் கூறுகிறார்.

1987 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கே உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஒரு தமிழ்ப் புலி உறுப்பினர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். அவரது உரைகள் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

யாழ்ப்பாண குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்து பங்குபற்றினர்.

இந்த நிகழ்வு தொடர்பில் சகோதரன் இல்லாத இரவு தகவல்களை வெளிப்படுத்துகிறது.

அவரது நாவல் உண்மையில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தைப் பற்றியது அல்ல என்றாலும். ஒருவரைப் போராளியாக மாற்றத் தூண்டுவது எது? அவர்களை தியாகிகளாக்குவது எது? அப்படியானால் அவர்கள் நேசிப்பவர்களுக்கும் அவர்களை நேசிப்பவர்களுக்கும் என்ன நடக்கும்? என்பதை நாவலாசிரியர் தமது நாவலில் விளக்குகிறார்.

இதேவேளை இலங்கை உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆராய்ச்சியின் விளைவாக இந்த நாவல் அமைந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிய பெண்கள் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் உலகின் மிகப்பெரிய கண்ணிவெடி களங்களில் ஒன்றான முகமாலையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விடயம் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலின் மற்றொரு அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட வயதுடைய அனைத்து தமிழ் சிறுவர்கள் அனைவரும் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டு யாழ்ப்பாணப் பெண்களின் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே விடுவிக்கப்படுகிறார்கள் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரில் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன. ஆனால் முக்கிய இடத்தைப் பிடித்தவை ஆயுதம் ஏந்திய பெண்களின் கதைகள் என்று நாவலாசியர் வி.வி கணேசனந்தன் கூறுகிறார்.

பல வழிகளில் பிரதர்லெஸ் நைட் என்ற சகோதரரல்லாத இரவு ஒரு பெண்ணிய நாவல். இது போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்டது.

இது உள்நாட்டு உழைப்பு மற்றும் பராமரிப்பை வீரமிக்க போர்க்கால முயற்சிகளாக உயர்த்தி குறிப்பாக மருத்துவ சகோதரத்துவம் செய்த தியாகங்களை போற்றும் நாவலாக அமைந்துள்ளதாக தெ ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் 'அரசு அல்லது அரசு அல்லாதவர்கள் செய்யும் அட்டூழியங்களை நியாயப்படுத்துவதில் தமக்கு ஆர்வம் இல்லை என்று நாவலாசிரியர் வி.வி கணேசாநந்தன் தெரிவித்துள்ளார்.
[29/04, 10:58] krishhna7: இலங்கை கடல் பரப்பில், எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, இழப்பீடு கோருவதற்கு தடை ஏற்படுத்துவதற்காக, கையூட்டல் பெறப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேற்று இந்த முறைப்பாட்டை பதிவுசெய்தனர்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட ஹர்ஷன ராஜகருணா, கப்பல் விபத்து தொடர்பில், முழுமையான இழப்பீடு கிடைக்கப்பெறுமானால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் நிதியை விட, அதிக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

அவ்வாறாயின், அதற்காக அரசாங்கம் முன்னிற்க வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் இதில் தொடர்புபட்டிருக்கலாம்.

இவ்வாறான அழுத்தங்கள் இருந்தால் மாத்திரமே, விசாரணைகள் இடைநிறுத்தப்படும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தை மூடிமறைக்க, வழக்குத் தாக்கல் செய்யாதிருக்க 250 மில்லியன் டொலரை, எவரோ ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, மக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை சுரண்டியவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு உள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.