பெண்கள் பொட்டு, காதணி அணிய தடை விதித்த தோட்ட நிர்வாகம்...

பெண்கள் பொட்டு, காதணி அணிய தடை விதித்த தோட்ட நிர்வாகம்...

நுவரெலியா - உதரடெல்ல தோட்டத்தில் தமிழ் பெண்கள் பொட்டு அணிவதற்கும் காதணி அணிவதற்கும் தோட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் பணிப்பெண்கள் பொட்டு மற்றும் காதணி அணிவதற்கு தோட்ட நிர்வாக அதிகார சபை தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை உற்பத்தியின் போது தேயிலைக்குள் திலகம் மற்றும் காதணி விழுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அதிகார சபை தெரிவித்துள்ளது.