சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் ஆராய விசாரணை குழு!

சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் ஆராய விசாரணை குழு!

குருநாகல் போதனா மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குழுவொன்றையும் நியமித்துள்ளது.

இது குறித்து பேசிய சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால, ஜனவரி மாதம் முதல் டயாலிசிஸ் பிரிவில் குறைந்தது ஐந்து மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, இது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதம தொற்றுநோய் நிபுணர் சமித்த கினிகே தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது
ஆதாரங்களின்படி, அடையாளம் தெரியாத சில நோய்க்கிருமிகள் இரத்த டயாலிசிஸ் பிரிவுக்குள் நுழைந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சுகாதார அமைச்சகம் முழு சூழ்நிலையையும் ஆராய்ந்து வருகிறது என்று மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சுகாதார அதிகாரிகள்  டயாலிசிஸ்  பிரிவை மூடிவிட்டு சிறுநீரக நோயாளிகளை அருகிலுள்ள பிற பிரிவுகளுக்கு அழைத்துச் செல்ல விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.