நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா இலங்கைக்கு வழங்குகிறது!

நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா இலங்கைக்கு வழங்குகிறது!

 இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளது.

இந்த தகவலை முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு பயணம் செய்த அவர் கொழும்பு துறைமுகத்தில் வைத்
து இதனை அறிவித்துள்ளார்.

விஜயபாகு என்ற பெயரைக் கொண்ட மூன்றாவது கண்காணிப்பு கப்பலை இலங்கையின் உரிமைக்கு மாற்றும் நிகழ்வின் போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நான்காவது கப்பலுக்கான முயற்சிக்கு 9 மில்லியன் டொலர் நிதியுதவியை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையின் துணை செயலாளர் வர்மா தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட்டவுடன்,அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். 

அத்துடன் இந்தக் கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கண்காணிப்பில் ஈடுபட வழியேற்படும்.

அதேநேரம், இந்தியப் பெருங்கடலின் பரபரப்பான கடல் பாதைகளை கடக்கும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.