ஆவா குழுத் தலைவரா இவர் : வலுக்கும் சந்தேகம்?????

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவர் எனக்கூறப்படும் இளைஞனின் கைதும் : வாக்குமூலமும்!

ஆவா குழுவின் புதிய தலைவர் என கூறிக் கொள்ளும் இந்த இளைஞர் கடந்த ஒரு வருட காலமாகவே அந்த குழுவில் தலைமை வகிப்பதாக வாக்கு மூலத்தில் கூறுகிறார்.

ஆனால் அருண் சித்தார்த்தன் என்பவரே ஆவா குழுவின் தலைவர் என ஏற்கனவே பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஏற்கனவே, சர்ச்சைக்குரிய கருத்துகள் தமிழின விரோத சொல்லாடல்கள் மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் மற்றும் ஊடக சந்திப்புகளின் போது தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டவரே அருண் சித்தார்த்தன்.

அவரே பல திட்டமிட்ட தாக்குதல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் என கடந்த பல வருடங்களாக அடையாளப்படுத்தி வந்தார்

ஆனால், தற்போது கைது செய்யப்பட்ட இளைஞர் யார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அருண் சித்தார்த்தன் நன்றாக சிங்களம் பேசக்கூடியவர் என்ற நிலையில் இங்கு வாக்குமூலம் அளிக்கும் இளைஞன் சிங்களத்தில் பேசுவதற்கு தடுமாறும் விதத்தையும் நோக்கலாம்.

இங்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் வழங்கும் பதில்களை நீங்கள் உற்று நோக்கினால் இந்த விடயம் தெளிவாகப் புரியும்.

இது குறித்து உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

இது உண்மையில் ஆவா குழுவின் தலைவரின் கைதா அல்லது பொலிஸார் வேறொரு இளைஞனை கைது செய்துவிட்டு நாடகம் ஆடுகின்றார்களா என்ற கேள்வி உங்களுக்கும் தோன்றுகிறதா????