மின்சார கட்டணம் 3 மாதங்களுக்கொருமுறை திருத்தம் செய்யப்படும்!

மின்சார கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சார கட்டணம் 3 மாதங்களுக்கொருமுறை திருத்தம் செய்யப்படும்!

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

முன்னதாக 6 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந்தநிலையில், பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு அதனை மாற்றியமைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.