புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட வர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் இறந்த உடள்கலை புதைக்கப்பட்ட இடத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிர்நீத்த  உடல்கள் புதைக்கப்பட்டுள்ள 
புதுக்குடியிருப்பு ஐயனார்கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில்  உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில்  சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சுனாமி பேரலையில் சிக்கி உயிர்நீத்தோரின் நினைவாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியானது, யுத்த காலத்தில் இராணுவத்தால் அழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஏற்பாட்டில் புதிதாக தூபி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.