இங்கிலாந்து அணி நெதர்லாந்தை 160 ஓட்டங்களால் வெற்றி!

 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய 40 வது போட்டியில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து 160 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

இங்கிலாந்து அணி நெதர்லாந்தை 160 ஓட்டங்களால் வெற்றி!

 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய 40 வது போட்டியில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து 160 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

புனேயில் இடம்பெற்ற குறித்த போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

340 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.