தப்பிச் செல்ல முயற்சித்த முக்கொலைச் சந்தேக நபர் கைது

காலை 8:15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-653 இல் ஏறுவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு டுபாய்க்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 18ஆம் திகதி மித்தெனியவில் இந்த மூன்று கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் கட்டுவான, அகுலந்தெனிய, டொரெமுரே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய படலகே பசிது சஞ்சன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை 8:15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-653 இல் ஏறுவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மித்தெனிய பொலிஸ் விசேட அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வந்து அவரை மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.