மத்திய வங்கி அனுமதியின்றி நிதி நிறுவனம் நடத்தி மோசடி - ஒருவர் கைது!

மத்திய வங்கியின் உரிய அனுமதி இன்றி, நிதி நிறுவனம் நடத்தி பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கண்டியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய வங்கி அனுமதியின்றி நிதி நிறுவனம் நடத்தி மோசடி - ஒருவர் கைது!

சந்தேகநபர், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய வங்கியின் அனுமதியின்றி, நடத்திச் செல்லப்பட்ட நிறுவனத்தின் ஊடாக குறித்த நபர் 9,900 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 54 வயது மதிக்கத்தக்க கண்டிவிவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளராகவும், பங்குதாரராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சந்தேகநபருக்கு எதிராக நம்பிக்கை மீறல், நிதிமோசடி உள்ளிட்ட பல பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.