சுமன தேரரின் கருத்து தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - சுமந்திரன்!
அம்பிட்டிய சுமன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென , நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் காவல்துறைமா அதிபரை கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் காவல்துறைமா அதிபருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன தேரரின் பகிரங்கமான அறிக்கைகள் ஊடகங்களில் மிக அதிக அளவில் வெளியானதாக அவர் அந்த கடிதத்தில், சுட்டிக்காட்டியுள்ளார்.