கொட்டகலையில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

கொட்டகலையில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

ஹட்டன் ரோட்டரக்ட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட உயர்தர மாணவர்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை (10) கொட்டகலை ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியில் காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

மேற்படி கருத்தரங்கில் பல்கலைக்கழக பாடத்தெரிவுகள், தொழில்முறை மற்றும் சுயத்தொழில் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்படவுள்ளன. 

கருத்தரங்கின் வளவாளர்களாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நைட்டா, தொண்டமான் தொழில்பயிற்சி நிலையம், நோர்வூட் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றின் வளவாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.