இலங்கை வந்த பிரான்ஸ் கடற்படைக் போர்க் கப்பல்!

இலங்கை வந்த பிரான்ஸ் கடற்படைக் போர்க் கப்பல்!

பிரான்ஸ் கடற்படைக் போர்க் கப்பலான பிரொவென்ஸ், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் கடற்படை மரபுப்படி வரவேற்கப்பட்டது.

இப் போர்க்கப்பல் 142.20 மீற்றர் நீளமும், மொத்தம் 160 நிர்வாகக் குழுவினரையும் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் லியோனல் செக்பெரிட் பணியாற்றுகின்றார்.

இப் போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் நிர்வாகக் குழுவினர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர் 20 ஆம் திகதி இலங்கையை விட்டு குறித்த கப்பல் புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.