ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ்!

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய (05) தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவியாகவும், இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.