எரிபொருள் விலை திருத்தம்?
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை விலை திருத்தம் செய்யப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பினும் நேற்றைய தினம் (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (01) மீண்டும் கூடவுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.