சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகாது?

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று (25) வெளியாகாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகாது?

எனினும், பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்

அத்துடன், எதிர்வரும் 4 அல்லது 5 நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.