காஸாவில் வெளியேற்றப்படும் மக்கள் - 6 இலட்சம் பேர் பாதிப்பு!
தெற்கு காசாவிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான பாலஸ்தீன அகதிகளுக்கான தலைவர் Philippe Lazzarini தமது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பாதி பேர் ஏற்கனவே தமது இருப்பிடங்களை இழந்து தவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்களை வெளியேறுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.