ஜெமினி செயற்கை நுண்ணறிவு : சுந்தர் பிச்சையை பதவி விலக்கும் சதியா?

ஜெமினி செயற்கை நுண்ணறிவு : சுந்தர் பிச்சையை பதவி விலக்கும் சதியா?

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவரே ராஜினாமா செய்வார் என, ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவுனர் சமீர் அரோரா கருத்து தெரிவித்துள்ளதாக, ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சுந்தர் பிச்சை பதவி விலகுவது குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான 'ஜெமினி ஏஐ'யின் தோல்வியே இதற்கு காரணம் என்று ’எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ள சமீர் அரோரா, சுந்தர் பிச்சையின் பதவிக்காலம் முடிவடைவதாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

"சுந்தர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவார் என்பது எனது யூகம். செயற்கை நுண்ணறிவு தளத்தை வெற்றியடையச் செய்வதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்ததால், வேறு யாராவது அவரது பதவியில் பொறுப்பேற்பார்கள்” என்று அரோரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.