விகாரை ஒன்றில் துப்பாக்கி பிரயோகம்

மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விகாரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
விகாராதிபதி உறங்கிக் கொண்டிருந்த அறையை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.