பொலிஸ் மா அதிபர் விவகாரம் - சபாநாயகர் அதிரடி தீர்மானம்!
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவதற்கு சட்டரீதியான அடிப்படைகள் இல்லை என்பதை எடுத்துரைத்த சபாநாயகர், அவ்வாறான சூழ்நிலையில் தாம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடப் போவதில்லை எனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு பிரதம நீதியரசர் மற்றும் சபாநாயகர் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.