ரஷ்யாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

ரஷ்யாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

ரஷ்யாவில் நேற்று மாலை நடத்தப்பட்ட திடீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பாதிரியார் உட்பட 14 பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெற்கு டகேஸ்டன் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டகேஸ்டன் மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
 
டகேஸ்டன் குடியரசின் தலைவரான செர்ஜி மெலிகோவ் கூறுகையில், டெர்பென்ட் மற்றும் பிராந்திய தலைநகர் மகச்சகாலா (Makhachkala) ஆகிய நகரங்களில் உள்ள தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது சுமார் 120 கிலோமீட்டர்கள் (75 மைல்கள்) தொலைவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற  தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது ஆறு "போராளிகளும்" கொல்லப்பட்டதாகக் கூறினார். .

டெர்பென்ட்டில் உள்ள தேவாலயத்தின் மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்ட பாதிரியார், டகேஸ்டன் பொது கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் ஷமில் காதுலேவ்வினால் தந்தை நிகோலே என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

அவருக்கு 66 வயது மற்றும் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்" என்றும் கதுலேவ் கூறினார்.