அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரரை சந்தித்த இலங்கை அமைச்சர்!
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க்க குணதிலக்கவை சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சந்தித்துள்ளார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க்க குணதிலக்கவை சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சந்தித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இதன்போது இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஷ்க்க குணதிலக்கவை ஹரின் பெர்னாண்டோ சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூர்யவும் கலந்து கொண்டார்.
இதேவேளை, தனுஷ்க்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்களில் மூன்றினை அரச சட்டத்தரணி மீளப்பெற்றுக்கொண்டமையை அடுத்து ஒரு குற்றச்சாட்டினை மாத்திமே எதிர்கொள்கின்றார்.
இதற்கமைய தனுஷ்க்க குணதிலக்க இணக்கமின்றி உடலுறவு கொண்டமைக்கான குற்றச்சாட்டினை மாத்திரமே எதிர்கொள்கின்றார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 29 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட தனுஷ்க்கவிற்கு எதிராக நான்கு வழக்குகள் தொடரப்பட்டன.
எவ்வாறாயினும் ஒரேயொரு குற்றத்திற்கான விசாரணைக்கு அவர் நீதிமன்றில் பிரசன்னமாகும் நிலையில் நிபந்தனை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.