சாணக்கியன் இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!

சாணக்கியன் இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இல்லத்தில் மேற்படி கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த மத்திய குழுக் கூட்டம் நேற்று 8 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது.

எனினும், கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டி அது பிற்போடப்பட்டிருந்தது.

அதுவே எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.