வழமைக்கு திரும்பும் மின்விநியோகம் - காரணம் இதுதான்!
![வழமைக்கு திரும்பும் மின்விநியோகம் - காரணம் இதுதான்!](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67a899c93ebf9.jpg)
தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏராளமான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் மின்வலுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் 80 சதவீதமான பகுதிகளுக்கு மின்வியோகம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பாணந்துறை கிரிட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் நிலைமையை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை, தேசிய மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து, தீவு முழுவதும் மின் தடையை ஏற்படுத்தியது.
குறித்த துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதுண்டமையே மின்சார தடைக்கு காரணம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் கூறியதுடன், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.