புதிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்து மில்லியன் புதிய கடவுச்சீட்டுக்கள் பெறப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறையை சமாளிக்க ஒரு நாளைக்கு 1000 கடவுச்சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய தோற்றம் கொண்ட கடவுச்சீட்டுகள் அடுத்த மாதம் வரவிருப்பதால் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பழைய கடவுச்சீட்டை படிப்படியாக நீக்கி மிகவும் பாதுகாப்பான பயண ஆவணத்தை அறிமுகப்படுத்தியமையினால் கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.