நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை ரத்து!
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சேவையை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மாத்திரம் இயக்குவதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதனூடாக, இந்தியாவில் இருந்து 50 பயணிகளும், காங்கேசன்துறையிலிருந்து 30 பயணிகளும் செரியபாணி கப்பலில் பயணம் செய்தனர்.
இந்தநிலையில், போதிய அளவு பயணச்சீட்டு முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.