மலையகத்தில் வீடொன்று இடிக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைக்கு வலியுறுத்தல்!

எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் மாத்தளை - ரத்வத்த தோட்டத்திலுள்ள வீடொன்று இடிக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெருந்தோட்டத்தின் எல்லையில் உள்ள காணி ஒன்றின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தோட்ட முகாமையாளர்கள் சட்டரீதியாக உரித்துடையவர்கள எனவும் அதன் உறுப்பினர் தம்மிக்க கொப்பேகடுவ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த வீடு அனுமதியற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் உரிமையாளர் பெருந்தோட்ட சமூகத்தைச் சாராத வெளியார் ஒருவர் எனவும் ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் தம்மிக்க கொப்பேகடுவ குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.