கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உடனடியாக பதவி விலக வேண்டும் -  காணாமல் போனோரின் தாய்மார்!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காணாமல் போன தமிழ் உறவுகளின் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை மெட்ராஸ் ட்ரிபியுன் வெளியிட்டுள்ளது.

தங்களது தொடர்ச்சியான போராட்டத்தின் 2300வது நாளான ஜூன் 8ஆம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தாய்மார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தமது பிள்ளைகளை கண்டறியவும், தமிழர்கள் இறையாண்மையை அடைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைக் கோரியும், தாய்மாரின் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் கீழ், இலங்கைக்கு வழங்கிய நிதியானது தமிழர்களுக்கு எதிரான இடைவிடாத ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கு உதவியுள்ளதாக காணாமல் போனோரின் தாய்மார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கப்பட்டதை அடுத்து தமிழர் மீதான ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

எனவே சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காணாமல் போன தமிழ் உறவுகளின் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.